அழகு நாச்சியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை!
ADDED :4157 days ago
தெக்கலூர் பகுதி கோவம்ச குல இளைஞர்கள் குழு சார்பில், அழகு நாச்சியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. மழை பொழிய வேண்டி நடத்தப்பட்ட இவ்வழிபாட்டில், அழகு நாச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, அலங்கார தீபாராதனை நடந்தது. இளைஞர் குழு பிரதிநிதி கனகராஜ் தலைமை வகித்தார். முன்னதாக, மழை வேண்டி, சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தெக்கலூர் வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.