சிவகங்கை சோழபுரம் அம்மன் கோயிலில் திருவிளக்குப்பூஜை!
ADDED :4153 days ago
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிவகங்கை அருகேயுள்ள சோழபுரம் உலகு சுந்தரி அம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து நடந்த திருவிளக்குப் பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.