செஞ்சி சுப்பிரமணியருக்கு சந்தன காப்பு!
ADDED :4348 days ago
செஞ்சி: செஞ்சி பி. ஏரிக்கரை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு ஆடி கிருத்திகை விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவ ங்கியது. 21ம் தேதி ஆடி கிருத் திகையை முன்னிட்டு காவடி ஆட்டம், தேர் இழுத்தல், தீ மிதித்தல், செடல் போடுதல், மிளகாய் பொடி அபிஷேகம் உட்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் (22ம் தேதி) இடும்பன் பூஜை, கொடியிறக்கம், காப்பு களைதல் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பில் ராஜ அலங்காரம் செய்தனர். விழா குழுவினர் அரங்க ஏழுமலை, சிவக்குமார், மதிய ழகன் கலந்து கொண்டனர்.