உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மப்பேடு ஓசூரம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா துவக்கம்

மப்பேடு ஓசூரம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா துவக்கம்

மப்பேடு: மப்பேடு, ஓசூரம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா துவங்கி உள்ளது. மப்பேடு ஊராட்சியில் உள்ளது ஓசூரம்மன் கோவில், இந்த கோவிலில் அமைந்துள்ள ஓசூரம்மன், மன்னியம்மன், செங்காட்டம்மன் ஆகிய கிராம தேவதைகளுக்கு தீ மிதி திருவிழா, கடந்த 25ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா, வரும் 3ம் தேதி மாலை நடைபெறவுள்ளது. பின், மறுநாள் 4ம் தேதி கோவிலில் விடார்த்தி உற்வசம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !