கொட்டுப்பாளையத்தில் பால் குட ஊர்வலம்!
ADDED :4423 days ago
புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, பால் குட ஊர்வலம் நடந்தது.கொட்டுப்பாளையம் இ.சி.ஆரில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவில் கடல் தீர்த்தவாரி விழா மற்றும் ஆடிப்பூரத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆடிப்பூரத்திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். சுவாமிக்கு பால் அபிஷேகம், கலச அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.