முத்தாம்பாளையத்தில் ஊரணி பொங்கல் விழா!
ADDED :4423 days ago
விழுப்புரம்: முத்தாம்பாளையம் ஏரியில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் ஆடிமாத ஊரணி பொங்கல் விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையம் ஏரியில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடிமாத ஊரணி பொங்கல் விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை அய்யனார், வீரன், நவக்கிரகங்கள் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை 3 மணிக்கு கோவில் வளாகத்தில் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலை 5 மணிக்கு பம்பை உடுக்கையில் வர்ணனை பாட்டும், சுவாமி அருள் கேட்கும் நிகழ்ச்சியும் நடந்தது.