சித்தலூர் அம்மன் கோவிலில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை!
ADDED :4227 days ago
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தியாகதுருகம் அடுத்த பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிமாத 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கருவறையில் உள்ள பிரமாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்து ஆராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங் கல் வைத்து, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். கோவில் தர்மகர்த்தா கோவிந்தசாமி, பாஞ்சாலை, கண்ணன், பூசாரிகள் தமிழ்செல்வன், குமார், நாராயணன், சங்கர் ஆகியோர் பூஜைகளை செய்தனர். அதேபோல் வடபூண்டி பச்சையம்மன் கோவிலிலும் நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.