உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் அம்மனுக்கு பாலாபிஷேகம்!

ராசிபுரம் அம்மனுக்கு பாலாபிஷேகம்!

ராசிபுரம்: ராசிபுரம், சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அத்தாயி அம்மன் கோவிலில், உலக நன்மைக்காக வேண்டி பாலாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம், இரவு, 7 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர், ஸ்வாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. முடிவில் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்று மாலை, 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !