தேவகோட்டை குருபூஜை விழா!
ADDED :4104 days ago
தேவகோட்டை : தேவகோட்டை நால்வர் கோயிலில், சுந்தரர் குருபூஜை விழா நடந்தது. காலை 9 மணிக்கு, நால்வர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சுந்தரர் பற்றிய சொற்பொழிவு, கருத்தரங்கம் நடந்தது. நீலா, தையல்நாயகி, நாராயணன் இறை வணக்கம் பாடினர். கவிஞர் அரு.சோமசுந்தரன் தலைமை வகித்தார். பேராசிரியர் சுப்பையா, கவிஞர் உமா, பேராசிரியர் தேவநாவே, கவிஞர் கார்மேகம், காசிநாதன், தட்சிணாமூர்த்தி, புலவர் வள்ளியப்பன், இளங்கோ, தலைமை ஆசிரியை சின்ன அலமேலு பங்கேற்றனர். இந்திரா நாகப்பன் நன்றி கூறினார்.