உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்திலி கோவில் தேர் திருவிழா!

இந்திலி கோவில் தேர் திருவிழா!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கடந்த மாதம் 22ம் தேதி அம்மனுக்கு பாரத பிரசங்கம் ஆரம்பத்துடன் கோவில் திருவிழா துவங்கியது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மகாகும்பாபிஷேகம், காப்பு கட்டுதல், சின்னான் மோடி எடுத்தல், காத்தவராயன் கழுகு மரம் ஏறுதல், நாள்தோறும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு அலகு போடுதல், மாலை 5 மணியளவில் தேர் திருவிழா நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பலர், பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர். இன்று பகல் 2 மணிக்கு கருப்பையா, குள்ளகருப்பையா சுவாமிகளுக்கு பொங்கல் இடுதலும், நாளை (7ம் தேதி) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !