உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிப்பு பணி மும்முரம்!

கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிப்பு பணி மும்முரம்!

திருவொற்றியூர் : கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி, வரும், 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவொற்றியூர் மணலி பேசின் சாலையோரத்தில் கூடாரம் அமைத்து வசிக்கும் வடமாநிலத்தவர்கள், கிருஷ்ணர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.சிறிய கிருஷ்ணர் பொம்மை 50 ரூபாய்க்கும், ஒரு அடி உயரமுள்ள கிருஷ்ணர் பொம்மை 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !