திரவுபதி கோயில் பூக்குழி விழா!
ADDED :4134 days ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வெளிபட்டணம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா நடந்தது. மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ராதை, கிருஷ்ணன், திரவுபதி, பஞ்சபாண்டவர் உற்சவ மூர்த்திகள் வீதி உலா நடந்தது. பக்தர்கள் அக்னிச் சட்டியுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். * வாலாந்தரவை வாழவந்த அம்மன் கோயிலில் ஆடிப் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.