உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.ஆனைமலையில் மாசாணியம்மன் கோவிலுக்கு ஆடிமாத கடைசி வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மாசாணியம்மனின் உற்சவ சிலைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. ஆடிமாத நிறைவு வெள்ளிக்கிழமையான நேற்று காலை 6.00 மணிக்கு, பால்பூஜையுடன் அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும் நடந்தது. கோவிலின் உள்ளே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து கோவிலின் ஆர்ச் பகுதி வரை வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது. இதில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் மற்றும் சாரணலாயம் தொண்டு நிறுவனத்தினை சேர்ந்த வனிதா, வால்பாறை டி.எஸ்.பி., சக்திவேல், ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்த லிங்ககுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !