பரனூர் ராதிகா ரமண பக்தகோலாகலன்பிரம்மோற்சவ விழா துவக்கம்!
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அடுத்த பரனுார் ராதிகா ரமண பக்த கோலாகலன் ஜெயந்தி
பிரம்மோற்சவ விழா நாளை துவங்குகிறது.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த பரனுார் ராதிகா ரமண பக்த கோலாகலன் கோவில் ஜெயந்தி பிரம்மோற்சவ விழா கிருஷ்ணபிரேமி சுவாமிகள் தலைமையில் நாளை துவங்குகிறது. முதல்நாள் காலை கொடியேற்றம், இரவு சுவாமி சேஷ வாகனத்தில் வீதியுலா, ஜனநோத்சவ விழா நடக்கிறது.18ம் தேதி காலை நந்தோற்சவம், இரவு 8 மணிக்கு பக்த கோலாகலன் அம்ச வாகனத்தில் எழுந்தருளி உரியடி விழா, வீதியுலா நடக்கிறது.19ம் தேதி காலை வன போஜனம், மாடு மேய்த்தல், இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா, 20ம் தேதி கோவிந்த பட்டாபிஷேகம், இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.21ம் தேதி காலை தானலீலை, இரவு பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 22ம் தேதி காலை கருட வாகனம், இரவு யானை வாகனத்திலும் ராதிகா ரமண கோலாகலன் வீதியுலா நடக்கிறது.23ம் தேதி
காலை கிருஷ்ணபிரேமி சுவாமிகள் தலைமையில் ராதிகா ரமண பக்த கோலாகலன் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு முத்துப்பல்லக்கில் வீதியுலா, 24ம் தேதி காலை பல்லக்கு, இரவு குதிரை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 25ம் தேதி காலை ராதிகா ரமண பக்த கோலாகலன் தேரோட்டம் நடக்கிறது. மாலை தீர்த்தவாரி, மறு நாள் 26ம் தேதி காலை விடையாற்றி நடக்கிறது.