ஊட்டி கிருத்திகை சிறப்பு பூஜை!
ADDED :4070 days ago
ஊட்டி: ஊட்டி அருகே எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில், கிருத்திகை பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு சித்தி செல்வவிநாயகர், ஆனந்தமலை முருகன், ஏழு ஹெத்தையம்மன், நவகிரகங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தூனேரி குழுவினரின் பஜனை, 12:00 மணிக்கு தஞ்சை அருளாளர் திருமுருகா ஆனந்த சித்தரின் அருளுரை, ஓய்வு பெற்ற ஆசிரியர் பெள்ளன் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்படுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.