திலகரின் இஷ்ட தெய்வம்!
ADDED :4188 days ago
விடுதலைப் போராட்ட காலத்தில் தேசத்தைக் காக்க துணை நின்ற விழா விநாயகர் சதுர்த்தி. சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதரதிலகர், விநாயகர்வழிபாட்டிற்காக பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, நாட்டுப் பற்றை ஊட்டினார். பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் முறையை ஏற்படுத்தியவர் இவரே. மகாராஷ்டிரா மாநிலத்தில், கணபதியை வழிபடுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இங்குள்ள அஷ்ட விநாயகர் என்னும் எட்டு விநாயகர் கோயில்கள் பிரசித்தமானவை. இந்தக் கோயில்களிலும், மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோயிலிலும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு கோலாகலமாக நடக்கும்.