கள்ளக்குறிச்சி அய்யப்பன் கோவில் மண்டலாபிஷேக விழா!
ADDED :4065 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அய்யப்பன் கோவில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள அய்யப்பன், விநாயகர், முருகன், துர்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்தது. நேற்று காலை மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. விநாயகர் வழிபாடு, புன்னியாகவஜனம், கும்ப கலசங்களில் அய்யப்ப சுவாமியை ஆவாகனம் செய்து பூஜைகள் செய்து, யாகம் வளர்த்தனர். அய்யப்பன் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு கலசாபிஷேம் நடந்தது.