உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி,புத்தி தேவியருடன் உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம் கோலாகலம்!

சித்தி,புத்தி தேவியருடன் உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம் கோலாகலம்!

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு சித்தி,புத்தி தேவியருடன் திருகல்யாணம் நடைபெற்றது. உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழா பத்துநாட்கள் நடைபெறும். சதுர்த்தி விழாவின் எட்டாம் நாளான இன்று(ஆக.27)மாலை 4.15 க்கு சித்தி,புத்தி ஆகிய இருதேவியருடன் வெயிலுகந்த விநாயகருக்கு சிவாச்சாரியார்கள் ஆதிரெத்தினம், ஜெகதீஸ்,ரவிகுமார் ஆகியோர் திருகல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

வட மாநிலங்களில் மட்டுமே விநாயகருக்கு திருமணம் நடைபெறுவது வழக்கம். தமிழகத்தை பொருத்தவரை இரு தேவியருடன் விநாயகருக்கு திருமணம் நடைபெறும் ஒரே இடமாக உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் திகழ்வதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண விழாவில் கலந்துகொண்டு விநாயகர் அருள் பெற்று சென்றனர். திருமணம் முடிவடைந்ததும் விநாயகருக்கு பக்தர்கள் மொய் செய்தனர். பின் பக்தர்களுக்கு கொழுக்கொட்டைகள், தாலிகயிறு, மஞ்சள், குங்கும் ஆகியவை வழங்கப்பட்டன. விநாயகர் தேவியருடன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !