செல்வ விநாயகர் அலங்கார வீதியுலா!
ADDED :4410 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பின்புறத்தில் ஸ்ரீ ஆதிவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள செல்வ விநாயகருக்கு கடந்த 29ம் தேதி விநாயர் சதுர்த்தியை யெ õட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 11:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. பின்னர் 11:30 மணிக்கு தீபாராதனை, 12:00 மணிக்கு செல்வ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.