மந்தாரக்குப்பம் பகுதியில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்!
ADDED :4103 days ago
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதியில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள், பழைய நெய்வேலி பெருமாள் ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டன. மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா, 29ம் தேதி துவங்கியது. அதில், மகா கணபதி சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜை நடந்தன. நேற்று முன்தினம் 1,008 கொழுக்கட்டைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து, மந்தாரக்குப்பத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பழைய நெய்வேலி பெருமாள் ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டன.