ஏழு கோவில்களில் கும்பாபிஷேகம்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த ஆற்றுமாமனந்தல் செல்வ விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், முத்து மாரியம்மன், ஆதிபராசக்தி, வெங்கடேச பெருமாள், கற்பழகி, ஆரியமாலா உடனுறை காத்தவராயர், ராயமுனியப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் விநாயகர், மகாலட்சுமி, நவநாயகர் சுவாமிகளுக்கு யாகம் வளர்த்து கோ பூஜை செய்தனர். வாஸ்து வழிபாடு, பூமாதேவி பூஜை, சந்திர சூரியர் பூஜை, யாகசாலை பிரவேசம் செய்து யாகம் வளர்த்தனர். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வேதபாராயணம், நாடி சந்தானம், திருமுறை பாராயணம், யாத்திரா தானம் பூஜைகள் நடந்தன. 11 யாக குண்டங்கள் அமைத்து கும்பாபிஷேக பூஜைகள் நடந்தது. காலை 11.30 மணியளவில் செல்வ விநாயகர், முத்துமாரியம்மன் உள்ளிட்ட 7 கோவில்களின் கோபுர கலசங் களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் அர்ச்சகர் கேசவன் தலைமையிலான குழுவினர் பூஜைகள் செய்தனர்.