அலகு குத்தி அம்மன் கோவில் விழா
ADDED :4044 days ago
வேலூர்: வாணியம்பாடி அடுத்த கூனிமேடு கிராமத்தில் உள்ள அலகு குத்தி அம்மன் கோவிலில், அலகு குத்தி அம்மன் வேண்டுதல் நிறைவேற்றும் விழா நடந்தது. கோவில் தலைமை பூசாரி முனியாண்டி துவக்கி வைத்தார். ஏராளமான, பக்தர்கள் கலந்து கொண்டு, அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில், உச்ச கட்டமாக கந்திலியை சேர்ந்த பக்தர் மாயக்கண்ணன் என்பவர், 10 அடி உயரத்துக்கு அலகு குத்தி அந்தரத்தில், மூன்று மணி நேரம் தொங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினார். பின், பக்தர்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கரகாட்டம், பொய்க்கால் குதிரை, பஞ்ச தந்திர கதைகள், வில்லுப்பாட்டு, ராமாயணம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.