சிதம்பரம் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4074 days ago
சிதம்பரம்: சிதம்பரம் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி கோவிலில் கடந்த 12ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 13ம் தேதி மாலை முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து 14ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. 15ம் தேதி காலை 4ம் கால யாகசாலை பூஜையும், பின்னர் கடம் புறப்பாடு செய்து, கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.