ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நந்திபகவானுக்கு வெள்ளி கவசம்
ADDED :4031 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்திபகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.