சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருமஞ்சன உற்சவம்!
ADDED :4233 days ago
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் திருப்பாவாடை உற்சவம் நடந்தது. காலையில் ரங்கநாதர், தாயார் அம்மாள், விஷ்ணு துர்கைக்கும் சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். பகல் 10 மணிக்கு திருப்பாவாடை உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். பூஜைகளை விஜயகுமார் பட்டாச்சாரியார் தலைமையில் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.