ஆஞ்சநேயருக்கு அவல்
ADDED :5291 days ago
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதன் ஸ்தலமான திருவெண்காடு இருப்பது போல, கேரள மாநிலம் தலைச்சேரி அருகிலும் திருவெண்காடு என்ற தலம் உள்ளது. ஆனால், இங்கிருப்பதோ ராமசாமி கோயில். கருவறைக்கு வெளியே நிற்கும் ஆஞ்சநேயர் ராமனை வழிபடும் அஞ்சலி ஹஸ்த நிலையில் உள்ளார். இவருக்கு பழம், வடை படைத்தாலும் மிக சிறப்பான நைவேத்தியம் அவல் தான். அவலை பாலில் நனைத்து சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து படைக்கிறார்கள்.