திருப்பரங்குன்றம் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் குருபூஜை!
ADDED :4029 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் குருபூஜை விழா இரண்டு நாட்கள் நடந்தன. நேற்று காலை யாகசாலை பூஜை முடிந்து அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள், விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தி இன்னிசை, நாடகம் நடந்தது. இரவு பூப்பல்லக்கில் சுவாமி அருள்பாலித்தார். தர்மகர்த்தா ராமலிங்கம், நிர்வாகி தட்சிணாமூர்த்தி ஏற்பாடுகள் செய்திருந்தனர்.