தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :4029 days ago
இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. முத்து மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப் 25 ல் துவங்கியது. செப் 26ல் மாலை 4.35 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. தினமும் அம்மனுக்கு கும்பம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நேற்று பகல் 2 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.