வேதாரண்யம் சரஸ்வதி பூஜை விழா!
ADDED :4135 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் உள்ள கோவில்களில், சரஸ்வதி பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விணையில்லா சரஸ்வதிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. நாகை ரஸ்தா காசிவிஸ்நாதர் கோவில், வடமழை ரஸ்தா நாட்டு மடம் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு அபிஷேகமும், தீபாராதணையும் நடந்தது. இதில் மாணவர்கள், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சரஸ்வதியை வழிபட்டனர்.