வள்ளலார் அவதார தினம்: கடலூரில் சிறப்பு பூஜை!
ADDED :4020 days ago
கடலூர்: கடலூர், புதுப்பாளையம் கழுத்து மாரியம்மன் கோவிலையொட்டி உள்ள, வள்ளலார் சபையில் அவரின் அவதார தின விழா நடந்தது. இதனையொட்டி அன்றைய தினம் காலை அகவல் பாராயணம் நடந்தது. தொடர்ந்து வள்ளலாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வள்ளலார் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.