உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல்!

கோவிலில் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல்!

விழுப்புரம்: முன்னாள் முதல்வர் ஜெ., வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டி, விழுப்புரத்தில் அ.தி.மு.க.,வினர் மண் சோறு சாப்பிட்டனர். விழுப் புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோவிலில் அ.தி.மு.க., சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் 108 பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கோலியனுõர்  ஒன்றிய சேர்மன் விஜயா சுரேஷ்பாபு தலைமையில் அ.தி.மு.க.,வினர் தரையில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டனர். கோலியனுõர் ஒன்றிய  செயலாளர் முருகன், விழுப்புரம் நகர் மன்ற சேர்மன் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர்கள் செங்குட்டுவன், கல்பட்டு ராமலிங்கம், கஸ்துõரி ராமச்சந் திரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு வரவேற்றார். தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் சேர்மன் குப் புசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜு, நாராயணன், ஆறுமுகம், செந்தில்குமார், சிவக்குமார், லட்சுமி ராமசாமி, அருணகிரி, அருண், பிரேமா முருகன்,  அற்புதம் கணபதி, கிருஷ்ணவேணி ஏழுமலை, தனலட்சுமி, நகர் மன்ற கவுன்சிலர்கள் ராம தாஸ், வரதன், பாலசுப்ரமணியன், பொறியாளர் ரமேஷ்,  ஊராட்சி தலைவர்கள் முனுசாமி, செந்தில், சுந்தர்ராஜன், லாரன்ஸ், குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !