ஆனைமலையில் லட்சுமி நரசிம்மமூர்த்தி திருவீதி உலா!
ஆனைமலை: ஆனைமலையில் லட்சுமி நரசிம்மமூர்த்தி கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா நடந் தது. ஆனைமலையில்,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோவிலில், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ÷ தவி,பூதேவி சமேத ஸ்ரீநரசிம்மபெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளின் உற்சவ சிலைகள் அலங்கார ரதத்தில் வைக்கப்பட்டது. கருடாழ்வார் வாகனத்தில் திருவீதி உலா வந்தது. மாலை 6.00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு திருவீதி உலா, உப்பாற்றங்கரையின் வழியாக ஸ்ரீ மாகளிய ம்மன் கோயில், திரவுபதியம்மன் கோவில், ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில் வழியாக திருவீதி நடந்தது. சுவாமிக்கு 27 வகை மலர்கள், 16 வகைய õன பூமாலைகள், 18 வகையான ஆபரணங்கள்,12 வகையான அலங்கார பல்புகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. திருவீதி உலாவில் உற்சவ மூ ர்த்தி, அலங்கரிக்கபட்ட வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.