முத்துமாரியம்மன் கோவிலில் ஹோமம்
ADDED :4002 days ago
ஊட்டி : ஊட்டி பிங்கர்போஸ்ட் கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த பாலஸ்தாபண நிகழ்ச்சியில்,சிறப்பு ஹோமம் நடந்தது. ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், நேற்று காலை 9:00 மணிக்கு பாலஸ்தாபண திருப்பணி பூஜை துவங்கியது. இதில், தஞ்சாவூரில் இருந்து சிவாச்சாரியார்கள் பலர் பங்கேற்று சிறப்பு ஹோமங்களை வளர்த்தனர். உள்ளூர் பூஜாரிகள் பங்கேற்று மாலை 6:00 மணிவரை சிறப்பு பூஜைகளை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டியினர், மானஸ் அமைப்பினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.