உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா!

திருக்கோவிலூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பாலசுப்ரமணியர் கோவிலில் 26ம் ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சுவாமி வெள்ளி கவசத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கோவிலூர், ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்தது.  காலை 6.00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9.00 மணிக்கு வெள்ளி கவசத்தில் சுவாமிக்கு  மகா தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு  தீபாராதனை, அர்ச்சனை நடந்தது.  இன்று மாலை 6.00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம்  நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !