உத்திரகோசமங்கையில் அன்னாபிஷேக பூஜை!
கீழக்கரை : உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சமேதர் மங்களநாதசுவாமி கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, வருடம் ஒருமுறை மூலவருக்கு நடைபெறும் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது. தானியங்கள் விளைச்சல் பெருக வேண்டியும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக சுவாமிக்கு18 வகையான அபிஷேகங்கள் நடந்தன. அதன்பின், 151 படி அரிசி சாதம், காய்கறிகள், பழங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். குருக்கள் முத்துக்குமார், கணேசன் பூஜைகள் செய்தனர். சாயரட்சை பூஜைக்கு பின், மாலையில் அக்னிதீர்த்தக்குளத்தில் அன்னப்பிரசாதம் கங்கை சேர்த்தல் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.கீழக்கரை: மீனாட்சி சமேதர் சொக்கநாதர் கோயிலில் நடந்த அன்னாபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.