உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்!

ஆனைமலை சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்!

ஆனைமலை :ஆனைமலை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்றுமுன்தினம் அன்னாபிஷேகம் நடந்தது. சுவாமி தரிசனம் செய்தனர். சிவன் கோவில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில், ஐப்பசி மாத அன்னாபிஷேகம் விசேஷமானதாகும். ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளான நேற்றுமுன்தினம், சிவபெருமானுக்கு அன்ன அபிஷேகம் செய்யப்பட்டது. கோட்டூரில் உள்ள ஆதி அமரநாயகி உடனமர் ஆதிசங்கரர் கோவில், ரமணமுதலி புதூரில் உள்ள மகுடீஸ்வரர் கோவில், பெத்தநாயக்கனூர் பட்டீஸ்வரர் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை முதலே மூலவருக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், கனி அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அன்னாபிஷேக தரிசனத்துக்கு மாலை 6.00 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !