உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவில் திருப்பணியில் தொய்வு!

பெருமாள் கோவில் திருப்பணியில் தொய்வு!

பண்ருட்டி: அக்கடவல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் சுற்றுச்சுவர் கட்ட டெண்டர் விட்டும்  பணி துவங்காததால் பக்தர்கள் அதிருப்தி அடைந் துள்ளனர். பண்ருட்டி  அடுத்த அக்கடவல்லி கிராமத்தில் 100 ஆண்டு பழமை வாய்ந்த  வரதாஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்  துறை பாரமரிப்பில் உள்ள இக்கோவிலை புதுப்பிக்கும் பணி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவிலுக்கு  சுற்றுச் சுவர் கட்ட இரண்டு மாதத்திற்கு முன் 6.25 லட்சம் ரூபாயிற்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால், சுற்றுச் சுவர் கட்டுமானப் பணி துவங்கப் படவில்லை. அதிருப்தியடைந்த பக்தர்கள், இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பணி துவங்கப்படவில்லை. இதனால்,  திட்டமிட்டப்படி வரும் ஜனவரிமாதம் கும்பாபிஷேகம் நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !