உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானுார் பிரம்மோற்சவம்: 18ம் தேதி துவக்கம்!

திருச்சானுார் பிரம்மோற்சவம்: 18ம் தேதி துவக்கம்!

திருப்பதி: திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, வருடாந்திர பிரம்மோற்சவம், வரும், 18ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடக்க உள்ளது. திருமலை,  ஏழுமலையானின் தர்ம பத்தினியான திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், வருடாந்திர பிரம்மோற்சவத்தை, தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

இதற்காக, கோவில் முழுவதும் துாய்மைபடுத்தும், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், நேற்று  நடந்தது.  வருடாந்திர  பிரம்மோற்சவ நாட்களில், தாயாரின் அனைத்து ஆர்ஜித சேவைகளையும், கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !