வீரஆஞ்சநேயர் கோவிலில் பால்குடம் அபிஷேகம்!
ADDED :4000 days ago
திருத்தணி: வீரஆஞ்சநேயர் கோவிலில், நேற்று, கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, 108 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடந்தது. திருத்தணி, மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில், நேற்று, காலை 9:30 மணிக்கு, 108 பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு, திருத்தணி ஜோதிசாமி பஜனை கோவிலில் இருந்து, கீழ்பஜார் தெரு வழியாக மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலை அடைந்தனர். பால்குட ஊர்வலத்தை அரக்கோணம் எம்.பி., அரி, நகர்மன்ற தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் துவக்கி வைத்து, பால்குடம் எடுத்தனர். காலை, 10:30 மணிக்கு, மூலவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.