ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு!
ADDED :3976 days ago
புதுச்சேரி: பாரதிபுரம் ஐயப்ப சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வேதபுரீஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு நடந்தது. கோவிந்தசாலை, பாரதிபுரத்தில், ஐயப்ப சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆறாம் நாள் நிகழ்ச்சியான நேற்று காலை கணபதி ஹோமம், உற்சவமூர்த்திக்கு அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணியளவில் ஆராட்டுபலிக்கு பிறகு, கோவிலிலிருந்து சுவாமி புறப்பட்டு, வேதபுரீஸ்வரர் கோவிலை அடைந்தது. கோவில் திருக்குளத்தில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு நடந்தது. பி ன்னர், சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஐயப்பா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.