உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 30ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை!

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 30ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை!

புதுச்சேரி: ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், வரும் 30ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. முத்தியால்பேட்டை ராமகிரு ஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மூன்றாம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி  காலை 8.௦௦ மணி முதல் இரவு 8.௦௦ மணி வரை சகஸ்ரநாம அர்ச்சனை, ஏகதின லட்சார்ச்சனையாக நடக்கிறது. பூத பைசாச பயநிவர்த்தி, தம்பதி  ஒற்றுமை, புத்திரப்பிராப்தி, கடன் நிவாரணம், தொழில் முன்னேற்றம் பெற, லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோவில்  நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவில் சிறப்பு அதிகாரி, லட்சுமி ஹயக்ரீவ  பெருமாள் பக்த ஜன சபையினர், லட்சுமி சரஸ் மாஸ்தி டிரஸ்ட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !