உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதிரியப்பன்!

பாதிரியப்பன்!

சென்னை-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், மணவூருக்கு அருகில் பாகசாலை என்ற சிற்றூரில் அருள்பாலிக்கும் முருகன் ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், இந்த ஊருக்கு ஆங்கில பாதிரியார் ஒருவர் வந்தார். பாகை முருகனின் பெருமை பற்றிக் கேள்விப்பட்ட அவர் இங்கு வந்து முருகனை மனமுருகி கூப்பிட்டாராம். அது முதல் இந்த முருகனுக்கு பாதிரியப்பன் என்ற பெயர் வழங்கப்படுகிறதாம். பாதிரியப்பனை வணங்குவோர் வித்தைகள் அனைத்தும் கைவரப் பெற்று, நோய்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்ந்திடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !