வெளிநாட்டு கோயில் நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்!
உலகம் முழுவதும் உள்ள முக்கிய இந்து கோயில்கள் தொடர்பான தகவல்கள் தினமலர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள்/ பட்டர்கள் தங்களுடைய தொடர்பு எண் மற்றும் முகவரியைத் தெரிவித்தால் அவற்றையும் இந்த பகுதியில் வெளியிட இருக்கிறோம். இதன் மூலம் உலகின் பிற பகுதிகளிலிருந்து உங்கள் பகுதிக்கு வரும் தமிழர்கள், உங்கள் கோயிலுக்கு வர எளிதாக இருக்கும். இந்த பகுதியில் உங்கள் கோயில் தொடர்பான தகவல்கள் விடுபட்டிருந்தாலும் அதையும் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம். அதையும் உடனடியாக சேர்க்க ஏற்பாடு செய்கிறோம். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வாழும் தமிழர்களில் சுமார் 8 லட்சம் பேர் நாள்தோறும் தினமலர் இணையதளத்தைப் பார்க்கிறார்கள். உலகத் தமிழர்களை இணைக்கும் பாலமாக விளங்கும் தினமலர் இணைய தளத்தில் உங்கள் கோயில் தொடர்பான தகவல்கள் முழுமையாக வெளியாக உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ilango@dinamalar.in