திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்!
சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, காரைக்கால் திருநள்ளாரில், அதிகாரிகள் முகாமிட்டு, ஏற்பாடுகளை துரிதப்படுத்தி வருகின்றனர். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில், சனி பரிகார தலம் என்பதால், தினமும் ஆயிரக்கணக்கிலும், சனிக்கிழமை தோறும் பல்லாயிரக்கணக்கிலும் பக்தர்கள் கூடுகின்றனர். இக்கோவிலில், இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனிபெயர்ச்சி விழா, வரும் டிச., ௧௬ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 2:43 மணிக்கு, சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார். அன்றைய தினத்தில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சனிபகவானை தரிசிக்க வருவார்கள். அதையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக நலன் குளம் சரி செய்யப்பட்டுள்ளதோடு, பக்தர்கள் எவ்வித சிரமும் இன்றி, வரிசையின் நின்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில், ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், போலீசார் சார்பில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி விழா நெருங்கிவிட்ட நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் காரைக்காலில் முகாமிட்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் தங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், காரைக்கால் நகரப்பகுதியில் உள்ள அரசு சுற்றுலா விடுதிகள், பொதுப்பணித்துறை விடுதி அறைகள், தனியார் ஓட்டல்கள், லாட்ஜ்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. வருவார்கள். அதையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நலன் குளம் சரி செய்யப்பட்டுள்ளதோடு, பக்தர்கள் எவ்வித சிரமும் இன்றி, வரிசையின் நின்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில், ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், போலீசார் சார்பில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.சனிப்பெயர்ச்சி விழா நெருங்கிவிட்ட நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் காரைக்காலில் முகாமிட்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் தங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், காரைக்கால் நகரப்பகுதியில் உள்ள அரசு சுற்றுலா விடுதிகள், பொதுப்பணித்துறை விடுதி அறைகள், தனியார் ஓட்டல்கள், லாட்ஜ்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.