வைக்கோல் விமானம்!
ADDED :4154 days ago
மலையரசி அம்மன் கோயில் சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டியில் உள்ளது. இங்கு வருடந்தோறும் வைகாசி பவுர்ணமியில் விழா கொண்டாடுகிறார்கள். அப்போது புதுப்பானையில் பானகம் கரைத்து அதில் தென்னம்பாளையை வைத்து மூன்று நாள் விழா கொண்டாடுகின்றனர். இந்த மூன்று நாள் விழாவின்போது இவ்வூர் மக்கள் வேறு எங்கும் தங்காமல் இரவுக்குள் ஊர் வந்து சேர்ந்து விடுவார்கள். கவியரசர் கண்ணதாசன் பிறந்த ஊர் இது. அவரது குலதெய்வமும் மலையரசி அம்மன்தான்.