உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேனைக்கல்ராயன் பெருமாள் கோவிலில் மகா விஷ்ணு தீபம்!

சேனைக்கல்ராயன் பெருமாள் கோவிலில் மகா விஷ்ணு தீபம்!

ஆனைமலை: ஆனைமலை சேனைக்கல்ராயன் பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத மகா விஷ்ணு தீபம்  ஏற்றப்பட்டது. ஆனைமலையின் ÷ மற்குப்பகுதியில், குன்றின் மீது ஆயிரத்து 500 அடி உயரத்தில், சேனைக்கல்ராயன் பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை  மாதத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்படும்.

இந்தாண்டு மகா விஷ்ணுதீபம் நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணிக்கு, சுதர்சன ஆழ்வாருக்கு யாகம்  வளர்க்கப்பட்டு, 5.00 மணிக்கு கிரிவலம் வந்து, 6.00 மணிக்கு  மூலவருக்கு தீபாராதனை காட்டி பெரிய அகல் (திருக்கோட்டி) தீபம் ஏற்றப்பட்டது.   அதைக்கொண்டு 20 அடி உயரம் கொண்ட கருட கம்பத்தின் மீது 6 அடி உயரம் கொண்ட கொப்பரையில் 400 கிலோ நெய்யினை ஊற்றி, 500 மீட்டர்  காடாதுணியில் செய்யப்பட்ட திரியை கொண்டு, ஹரே கோவிந்தா, என்ற பக்தர்களின் கோஷத்திற்கிடையே மகா விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்  பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது. தொடர்ந்து ஐந்து நாட்கள்  எரியும் இந்த தீபத்தின் ஒளியினை, தெற்கே ஆழியாறு, மேற்கே மீனாட்சிபுரம், கிழக்கே அர்த்தநாரிபாளையம் கரியாஞ்செட்டிப்பாளையம், வடக்கே  கிணத்துகடவு தாலுகாவின் தெற்கு பகுதி வரை என 30 கி.மீ சுற்றுளவிற்கு தெரியும் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.  

வால்பாறை: வால்பாறை நகர் நகை கடைவீதியை பல்வேறு மதங்களை சேர்ந்த மக்கள் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரு ங்கிணைந்து ஆண்டு தோறும் சமத்துவத்தை உணர்த்தும் வகையில் கார்த்திகை தீபத்திருநாளன்று கடை வீதி முழுவதும் 1,008 தீபம் ஏற்றி  இறைவனை வழிபடுகின்றனர். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருநாளையொட்டி நேற்றுமுன்தினம் இரவு 1,008 தீபம் ஏற்றி சுவாமியை  வழிபட்டனர்.  வியாபாரிகள் நடத்திய இந்த தீபவழிபாட்டில் நகை கடை வீதி முழுவதும் தீபஒளியால் ஜொலித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !