பக்தர்கள் நடத்திய காயத்ரி மஹா யாகம்
ADDED :4064 days ago
சேலம் : சேலம் செவ்வாய்பேட்டை, காளியம்மன் கோவிலில், காயத்ரி மஹா யாகம் நேற்று நடந்தது. ஹரித்துவாரில் உள்ள காயத்ரி தீர்த்தம் சாந்தி குஞ்ச் சார்பில் நடந்த மஹா யாகத்துக்காக, கோவில் வளாகத்தில், 24 யாக குண்டம் தனித்தனியே அமைத்து, யாகம் வளர்க்கப்பட்டது. ஹரித்துவார் குழுவினரின் பஜனையுடன், யாகம் துவங்கப்பட்டது. பிரார்த்தனை நிறைவேறவும், உலக மக்கள் நோய் நொடியின்றி, சுபிட்சமாகவும் வாழ வேண்டி, பக்தர்கள் குடும்ப சகிதமாகவும், குழுவாகவும் அமர்ந்து, நெய் வார்த்து, யாகம் வளர்த்தனர். இதற்காக, இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட, 108 வகையான அரிய மூலிகைகள் கொண்டு மஹா யாகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.