புவனேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா!
ADDED :4278 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி அம்மன் உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா நடந்தது. கார்த்திகை மாத நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு நடந்த சங்காபிஷேக விழாவில் விநாயகர், புவனேஸ்வரி அம்மன் உடனுறை புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து 108 சங்காபிஷேகம், சிறப்பு ஹோமங்கள் நடந்தது. பூஜைகளை ரவி குருக்கள் தலைமையில் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா சுப்புராயலு, குமாரசாமி செய்தனர்.