உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்துணர்வு முகாமில் லட்சுமி, பிரக்ருதி பங்கேற்பு!

புத்துணர்வு முகாமில் லட்சுமி, பிரக்ருதி பங்கேற்பு!

காரைக்கால்:  தமிழக யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்க,  புதுச்சேரி  மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, திருநள்ளார் சனி   பகவான் கோவில் யானை பிரக்ருதி அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை புத்துணர்வு   முகாமை, கோவை மாவட்டம் முதுமலை, டாப் சிலிப்பில் தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த முகாமில், புதுச்சேரி  மணக்குள விநாயகர் கோவில்   யானை லட்சுமி, திருநள்ளார் சனிபகவான் கோவில் பிரக்ருதி யானையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என, புதுச்சேரி அரசு கோரிக்கை   வைத்தது. இதற்கு, தமிழக அரசு இசைவு தெரிவித்தது. இதையடுத்து, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு நேற்று இரவு சிறப்பு பூஜை   செய்து புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  திருநள்ளார் பிரக்ருதி யானை கோயம்புத்துார் டாப் சிலிப்பில் நடக்கும் முகாமில் பங்÷  கற்க, நேற்று முன்தினம் இரவு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், சிவாச்சாரியார் ஆகியோர் ய  õனைக்கு சிறப்பு பூஜை நடத்தி வழியனுப்பி வைத்தனர். யானைக்கு உதவியாக 2 பாகன்களும் சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !