உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா!

மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள மெய்ப்பொருள் நாயனார் சித்தி வளாகத்தில் குருபூஜை விழா நடந்தது. சித்தி வளாகத்தில் துறவிகள் மற்றும் அடியார்கள் வழிபாடு நடத்தினர். காலை 8.30 மணிக்கு பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர், மெய்ப்பொருள் நாயனாருக்குஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தணிகாசலம் சுவாமிகள் இடபக் கொடியை ஏற்றினார். பேரூராட்சி தலைவர் தேவி முருகன், மருதுசேஷன்முன்னிலை வகித்தனர். ஆத்மலிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை, மலர் வழிபாடு, ஒளிவழிபாடு நடத்தினர். மாலை 6 மணிக்கு சீனுவாசனின் திருவருட்பா தேவஇன்னிசை கச்சேரி நடந்தது. சிவனடியார்கள்ராமமூர்த்தி, மாணிக்கவாசகம், சங்கர், தில்லைநடராஜன், கார்த்திகேயன், முருகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சம்பத், ஜெயபாலன், அயோத்தி, கோகிலாம்பாள் அருணாசலம், அம்பல வாணன், உதியன், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ் வேத வாரவழிபாட்டு சபை சார்பில் பஜனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !